முன்பனிகாலத்தில் குளிருக்கு இதமாக சூப் (தமிழில் வடிசல் என்று சொல்லாமா?) அருந்த நம் எல்லோருக்குமே விருப்பம். உடலுக்குத் தீங்கு தராத வடிசல் தயாரிக்க இதோ ஒரு எளிய குறிப்பு…
காராமணி சூப்
(மூன்று நபர்களுக்கு)
தேவையான பொருட்கள்
உலர் காராமணி – 2 கைப்பிடி அளவு
தக்காளி – 1 (அரியவும்)
சிறிய வெங்காயம் – 10
பூண்டு- 5 பற்கள்
மிளகு, சீரகம் தலா – 1 தேக்கரண்டி (பொடித்துக் கொள்ளவும்)
மஞ்சள் தூள் – ஒரு சிட்டிகை
எண்ணெய்- 2 தேக்கரண்டி
வடகம் – இரண்டு சிட்டிகை
உப்பு – தேவையான அளவு
தண்ணீர் – இரண்டு கோப்பைகள்
கருவேப்பிலை – ஒரு கொத்து
கொத்தமல்லித் தழை – ஒரு கைப்பிடி அளவு
எப்படி செய்வது?
உலர் காராமணியை 8 மணிநேரம் ஊறவைத்து, ஒருமுறை தண்ணீரில் அலசுங்கள். இதைக் குக்கரில் போட்டு, ஒரு கப் தண்ணீர் விட்டு, இரண்டு விசில் வரை விட்டு வேகவையுங்கள். வெந்த காராமணியை வடித்து தனியாக வையுங்கள். வடித்த நீரையும் தனியாக வையுங்கள்.
அடுப்பை மிதமான தீயில் வைத்து ஒரு அகலமான பாத்திரத்தில் எண்ணெய் விட்டு, வடகம், கருவேப்பிலை போட்டு தாளியுங்கள்.
இதில் அரிந்த வெங்காயம், பூண்டு, தக்காளியைப் போட்டு வதக்கி, வேகவைத்த காரமணியைச் சேர்த்து உப்பு, மிளகு, சீரக தூள் போட்டு கிளருங்கள். இதுவரை அடுப்பை மிதமான தீயிலே வைத்திருக்க வேண்டும்.
அடுத்து, இதில் காராமணி வேகவைத்து, வடித்த நீரை விட்டு, தேவைக்கேற்ப இன்னொரு கோப்பை தண்ணீரைச் சேர்த்து, அடுப்பை வேகமாக்கி கொதிக்க வையுங்கள். ஐந்து நிமிடங்கள் கொதித்ததும் கொத்தமல்லித் தழைத் தூவி அடுப்பை அணையுங்கள். பரிமாறும்போது தேவைக்கேற்ப மிளகுத்தூள், உப்பு சேர்த்து சூடாக சூவையுங்கள்.
நாக்கில் எச்சில் ஊற வைத்துவிட்டிர்கள் நன்றி