ஃபுட் ஸ்டைலிங், இதுக்கு பேளே சாரு, சமையல், சீசன் சமையல், முன் பனிகால சிறப்பு உணவுகள்

சீசன் சமையல் – முன் பனிகால சிறப்பு உணவுகள்!

படம்

தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களிலும் கர்நாடக மாநிலத்திலும் வயல் அவரைக்காய் என்று சொல்லப்படுகிற மொச்சைக்காய் ரொம்பவும் பிரசித்தமானது.  முன் மற்றும் பின்பனிகாலத்தில் இந்தப் பகுதி மக்களின் உணவில் வயல் அவரைக்காய் பிரதான இடம் வகிக்கிறது. இனிப்பு, காரம் என விதவிதமான சுவைகளில் இந்த ஒரு காய் மற்றும் அதிலிருந்து கிடைக்கும் விதைகளை வைத்து இந்தப் பகுதி மக்கள் சமைக்கிறார். அதில் ஒரு ருசியான ரெசிபி இதோ நீங்களும் செய்து பார்த்து ருகிக்க…

2

4

இதுக்கு பேளே சாரு (பிதுக்கம் பருப்பு குழம்பு)
தேவையான பொருட்கள்
வயல் அவரைக்காய் (மொச்சைக்காய்) உரித்த கொட்டைகள்  – 100 கிராம்
உப்பு – தேவைக்கேற்ப
மஞ்சள் தூள் – ஒரு சிட்டிகை
தண்ணீர் – 2 தம்ளர்

3

அரைப்பதற்கு
தக்காளி – 2
தேங்காய் சில்லுகள் –  ஒரு கைப்பிடி அளவு
சிறிய வெங்காயம் – ஒரு கைப்பிடி அளவு
பூண்டு – 5 பல்
இஞ்சி – ஒரு துண்டு
காய்ந்த மிளகாய் – 3
எண்ணெய் – 2 டீஸ்பூன்

தாளிக்க
எண்ணெய் – ஒரு குழிக்கரண்டி
கடுகு – ஒரு சிட்டிகை
கருவேப்பிலை – ஒரு கொத்து

அலங்கரிக்க
கொத்தமல்லித்தழை – ஒரு கைப்பிடி அளவு

எப்படி செய்வது?
புதிதாக அறுவடையான வயல் அவரைக்காயிலிருந்து விதைகளை உரித்தெடுங்கள். உரித்தெடுத்த விதைகளை 8 மணிறேரம் ஊறவைக்கவும். ஊறிய பிறகு, நீரை வடித்துவிட்டு லேசாக அவற்றை அழுத்தினால், பருப்புகள் வெளியே வரும். இப்படி சேகரித்த பருப்புகளை ஒரு முறை நீரில் அலசுங்கள்.
அரைக்கும் முன் : ஒரு வாணலியில் இரண்டு டீஸ்பூன் எண்ணெய் விட்டு சிறிய வெங்காயம், தக்காளி, காய்ந்த மிளகாய், தேவையெனில் மிளகு,சீரகம் (உணவே மருந்து என்கிறது சித்த மருத்துவம் -_ முன் மற்றும் பின் பளி காலத்தில் மிளகு சேர்ப்பது உடல் ஆரோக்கியத்துக்கு நல்லது) தலா 1 டீஸ்பூன் போட்டு வாசனை வரும்வரை வறுத்து எடுக்கவும். இதனுடன் தேங்காய், இஞ்சி சேர்த்து மைய அரைக்கவும்.
ஒரு வாணலியில் குழிக்கரண்டி எண்ணெயை விட்டு கடுகு, கருவேப்பிலை தாளித்து உரித்து வைத்திருக்கும் பருப்புகளைப் போட்டு கிளருங்கள். பிறகு, அதில் அரைத்த விழுதைப் போட்டு கிளறி, மஞ்சள் தூள், உப்பு சேர்த்து, தண்ணீர் விட்டு கிளருங்கள். பருப்பு வேகும்வரை கொதிக்கவிட்டு, குழம்பு கலவையாக வரும்போது கொத்தமல்லித் தழைத் தூவி அடுப்பிலிருந்து இறக்குங்கள்.

5

சாதத்துடன் அல்லது இட்லியுடன் சூடாக சாப்பிட உகந்தது இதுக்கு பேளே சாரு. இதன் ருசியை அதிகரிக்க சாப்பிடும்போது பசு நெய் சேர்த்துக் கொள்ளுங்கள்.

Advertisements

“சீசன் சமையல் – முன் பனிகால சிறப்பு உணவுகள்!” இல் ஒரு கருத்து உள்ளது

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.